இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்


இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 5 Sept 2021 2:07 AM IST (Updated: 5 Sept 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருத்தாசலம், 

பெட்ரோல், டீசல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் விருத்தாசலம் பெரியார் நகர் பஸ் நிறுத்தம் கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட செயலாளர் பரமசிவம் தலைமை தாங்கினார். ரமேஷ், முருகவேல், சிலம்பரசன், சாமிதுரை, வசந்த், கனகராஜ், தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் பரமசிவம் தலைமையில் நெற்றியில் திருநீறு பட்டை போட்டு கொண்டு சங்கு ஊதி கியாஸ் சிலிண்டருக்கு மலர் மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது. 
இதில் மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன், மாதர் சங்க வட்ட செயலாளர் அன்புச்செல்வி, மாணவர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் சின்னத்தம்பி, மாவட்ட செயலாளர் குமரவேல், லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

Next Story