கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 Sept 2021 2:26 AM IST (Updated: 5 Sept 2021 2:26 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகாசி,

சிவகாசி டவுன் போலீசார் அண்ணா காலனி பகுதியில் ரோந்து சென்ற போது அங்குள்ள கழிப்பிடம் அருகில் சந்தேகம் அடையும் வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்த போது பராசக்தி காலனியை சேர்ந்த பாடலிங்கம் (வயது27), சந்தோஷ்குமார் (27) என தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களை போலீசார் சோதனை செய்தபோது 115 கிராம் கஞ்சா வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.900-ஐ பறிமுதல் செய்தனர்.

Next Story