உலக தென்னை தின விழா
செங்கோட்டையில் உலக தென்னை தின விழா நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டையில் உள்ள அரசு தென்னை நாற்று பண்ணையில், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் உலக தென்னை தினவிழா கொண்டாடப்பட்டது. தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) நல்லமுத்து ராஜா தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் கனகம்மாள் வரவேற்றார். கலெக்டரின் நேர்முக உதவியாளரும், வேளாண்மை துணை இயக்குனருமான பாலசுப்பிரமணியம் சிறப்புரையாற்றினார்.
வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானி இளவரசன், தென்னை வளர்ப்புக்கான தொழில்நுட்பங்கள் குறித்தும், எக்ஸ்னோரா தலைவர் விஜயலட்சுமி இயற்கை வேளாண்மை குறித்தும் பேசினர். தென்னை சாகுபடி மற்றும் பராமரிப்பு பற்றிய கண்காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது.
முன்னதாக முன்னோடி தென்னை விவசாயிகளுக்கான வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன் போட்டியை நடத்தினார். ஆசிரியை அமுதா தலைமையில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தென்னை பற்றிய பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை பெற்றனர். வினாடி-வினாவில் அதிக மதிப்பெண் பெற்ற அணியினருக்கும் பேச்சுப் போட்டியில் கலந்துகொண்ட அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கும் தென்னை மரக்கன்று உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது. விவசாய சங்க தலைவர் செல்லத்துரை மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அட்மா வட்டார மேலாளர் பொன்ஆசீர், உதவி மேலாளர் டாங்கே, உதவி வேளாண்மை அலுவலர்கள் சிக்கந்தர் அமீன், முகமது ஜலால் மைதீன், குமார், அருணாசலம், சம்சுதீன் ஆகியோர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story