கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது


கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது
x
தினத்தந்தி 4 Sep 2021 9:15 PM GMT (Updated: 2021-09-05T02:45:15+05:30)

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளதாக மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா பரிசோதனை

  கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 248 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் புதிதாக 983 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 29 லட்சத்து 54 ஆயிரத்து 47 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் 21 பேர் இறந்த நிலையில், பலி எண்ணிக்கை 37 ஆயிரத்து 401 ஆக உயர்ந்து உள்ளது.

  நேற்று 1,620 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 28 லட்சத்து 98 ஆயிரத்து 874 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 17 ஆயிரத்து 746 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

உயிரிழப்பு இல்லை

  பெங்களூரு நகரில் 289 பேர், தட்சிண கன்னடாவில் 162 பேர், உடுப்பியில் 97 பேர், மைசூருவில் 89 பேர் உள்பட 983 பேர் பாதிக்கப்பட்டனர். பெங்களூரு நகரில் 7 பேர், தட்சிண கன்னடாவில் 5 பேர், ஹாசன், மைசூருவில் தலா 2 பேர், தார்வார், ஹாவேரி, கோலார், துமகூரு, உடுப்பியில் தலா ஒருவர் என 21 பேர் இறந்தனர். 21 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.
  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

  கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு நீண்ட நாட்களுக்கு பிறகு ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story