மணல் ஏற்றப்பட்ட மாட்டு வண்டி பறிமுதல்


மணல் ஏற்றப்பட்ட மாட்டு வண்டி பறிமுதல்
x
தினத்தந்தி 5 Sept 2021 2:57 AM IST (Updated: 5 Sept 2021 2:57 AM IST)
t-max-icont-min-icon

மணல் ஏற்றப்பட்ட மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.

உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சுத்தமல்லி நீர்த்தேக்க ஓடையில் இருந்து மணல் கடத்தப்படுவதாக நடுவலூர் கிராம நிர்வாக அலுவலர் அறிவழகனுக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர், நீர்த்தேக்க ஓடையில் சென்று பார்த்தபோது மணல் அள்ளி மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்த 3 பேரும், அவரை கண்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து அவர் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Next Story