‘அரசு வீட்டை ஒதுக்கும்படி இனி யாரிடமும் பிச்சை கேட்க மாட்டேன்’ - மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி ஆவேசம்


‘அரசு வீட்டை ஒதுக்கும்படி இனி யாரிடமும் பிச்சை கேட்க மாட்டேன்’ - மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி ஆவேசம்
x
தினத்தந்தி 5 Sept 2021 3:01 AM IST (Updated: 5 Sept 2021 3:01 AM IST)
t-max-icont-min-icon

8 முறை கடிதம் எழுதியும் எந்த பதிலும் இல்லை. அரசு வீட்டை ஒதுக்கும்படி இனி மேல் யாரிடமும் வீடு விவகாரத்தில் பிச்சை கேட்க மாட்டேன் என்று மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி ஆவேசம் அடைந்துள்ளார்.

பெங்களூரு:

மேல்-சபை தலைவர்

  கர்நாடக மேல்-சபை தலைவராக இருந்து வருபவர் பசவராஜ் ஹொரட்டி. இவர், ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஆவார். அவர், மேல்-சபை தலைவராக பொறுப்பு ஏற்று பல மாதங்கள் ஆகியும் அரசு வீடு ஒதுக்கி கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  இதுகுறித்து கர்நாடக மேல்-சபை தலைவரான பசவராஜ் ஹொரட்டி நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறிய
தாவது:-

பிச்சை கேட்க மாட்டேன்

  கர்நாடக மேல்-சபை தலைவராக இருக்கும் எனக்கு, விதிமுறைகளின்படி அரசு வீட்டை வழங்க வேண்டும். அரசு வீட்டை ஒதுக்கி கொடுக்கும்படி இதுவரை
8 முறை கடிதம் எழுதி உள்ளேன். ஆனால் அரசிடம் இருந்து இதுவரை எனக்கு எந்த பதிலும் வரவில்லை. எனக்கு, அரசு வீடும் ஒதுக்கப்படவில்லை. முதல்-மந்திரிக்கு காவேரி இல்லம் ஒதுக்கப்படுகிறது. முதல்-மந்திரியை விட நாங்கள் மேல் பட்டவர்கள். அப்படி இருந்தும் எனக்கு வீடு ஒதுக்காமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
  
மேல்-சபை தலைவராக இருக்கும் எனக்கு அரசு வீட்டை விதிமுறைகள் படி ஒதுக்கி கொடுக்கும்படி சபாநாயகருக்கு 8 முறை கடிதம் எழுதி உள்ளேன். இனிமேல் யாரிடமும் எனக்கு அரசு வீடு ஒதுக்கும்படி கேட்டு பிச்சை எடுக்க மாட்டேன். காந்தி பவன் ரோட்டில் உள்ள அரசு வீட்டை மேல்-சபை தலைவரான எனக்கு ஒதுக்க வேண்டும். அந்த வீடு தவிர வேறு எந்த ஒரு பகுதியில் அரசு வீடு கொடுத்தாலும் ஏற்க
மாட்டேன்.
  இவ்வாறு பசவராஜ் ஹொரட்டி கூறினார்.

Next Story