சிற்றார் அணைப்பகுதியில் லாரி கவிழ்ந்தது
சிற்றார் அணைப்பகுதியில் லாரி கவிழ்ந்தது.
அருமனை:
அருமனை அருகே சிற்றார்-2 அணைப்பகுதி உள்ளது. இந்த பகுதியையொட்டி உள்ள சாலை வழியாக தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று மதியம் நாகர்கோவிலில் இருந்து கனிமவளம் ஏற்றிக் கொண்டு கேரளா நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி சிற்றார் அணைப்பகுதியின் கரையோரமாக சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர், சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்பை உடைத்துக் கொண்டு அணையின் கரையோரம் கவிழ்ந்தது. லாரி கவிழ்ந்ததில் அணையின் கரையோரத்தில் இருந்த 3 மின் கம்பங்கள் சேதமடைந்தன. லாரி அந்த மின்கம்பத்தில் சிக்கியதால் அணைக்குள் மூழ்க வில்லை. இந்த விபத்தில் டிரைவரான கொல்லத்தை சேர்ந்த அனில்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
Related Tags :
Next Story