கழுகுகள் பாதுகாப்பு தின நிகழ்ச்சி


கழுகுகள் பாதுகாப்பு தின நிகழ்ச்சி
x
தினத்தந்தி 4 Sep 2021 9:37 PM GMT (Updated: 2021-09-05T03:07:55+05:30)

கழுகுகள் பாதுகாப்பு தின நிகழ்ச்சி

கூடலூர்

உலக கழுகுகள் பாதுகாப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான மசினகுடியில் உள்ள வாழைத்தோட்டம் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு கழுகுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதற்கு புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண்குமார் தலைமை தாங்கி பேசும் போது, சீகூர் வனப்பகுதியில் பிணந்தின்னி கழுகுகள் உள்ளது. பல்வேறு காரணங்களால் அதன் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அவை சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது என்றார். 

மேலும் கழுகுகளால் நன்மைகள், அவற்றை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறினார். தொடர்ந்து மாணவ-மாணவிகள் தங்களது சந்தேகங்களை வனத்துறையினரிடம் கேட்டு தெளிவுபடுத்தி கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வனத்துறையினர், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story