பெங்களூருவில் இருந்து அரசு பஸ்சில் கடத்திய குட்கா பறிமுதல்
பெங்களூருவில் இருந்து அரசு பஸ்சில் கடத்தி வந்த குட்காவை கிருஷ்ணகிரியில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி:
பெங்களூருவில் இருந்து அரசு பஸ்சில் கடத்தி வந்த குட்காவை கிருஷ்ணகிரியில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
குட்கா கடத்தல்
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று புறப்பட்டது. பஸ்சில் ஏறிய 2 மர்ம நபர்கள் தங்களை துணி வியாபாரி என கூறி 4 மூட்டைகளில் துணிகள் உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து துணி மூட்டைகளை பஸ்சில் ஏற்றியவர்கள் சேலத்திற்கு டிக்கெட் எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு பஸ் வந்த போது, பயணிகளிடம் டிக்கெட் பரிசோதகர் சோதனை செய்தார். அப்போது, மூட்டையில் என்ன உள்ளது என கேட்ட போது, பஸ்சில் இருந்த 2 பேரும் கீழே இறங்கி தப்பியோடினர். இதில் சந்தேகமடைந்த டிக்கெட் பரிசோதகர், அங்கு புறநகர் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
பறிமுதல்
அதன்பேரில் போலீசார் பஸ்சில் இருந்த மூட்டையில் சோதனை செய்த போது குட்கா, புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இந்த குட்கா பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு கடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் 4 மூட்டைகளில் இருந்த குட்காவை பறிமுதல் செய்தனர்.
குட்கா கடத்தல் தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிவர்களை தேடி வருகின்றனர். இதன் காரணமாக கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் நேற்று காலை பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story