கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் மண் சரிந்து விழுந்து தொழிலாளி சாவு


கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் மண் சரிந்து விழுந்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 4 Sep 2021 9:37 PM GMT (Updated: 2021-09-05T03:07:59+05:30)

கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் மண் சரிந்து விழுந்து தொழிலாளி இறந்தார்.

காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் எர்ரசிகரஅள்ளி பக்கமுள்ள வெரிய வேடனூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 55). தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள சுருளிஅள்ளி பகுதியில் கிணற்றில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் கிருஷ்ணன் மீது மண் சரிந்து விழுந்து மூச்சு திணறி இறந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story