கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர கண்காணிப்பு


கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 4 Sep 2021 9:39 PM GMT (Updated: 2021-09-05T03:09:44+05:30)

கொல்லங்கோடு அருகே கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கொல்லங்கோடு:
கொல்லங்கோடு அருகே கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் குமரி-கேரள எல்லையான களியக்காவிளையில் கேரள வாகனங்களை போலீஸ் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் சோதனை செய்து, கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களை மட்டுமே குமரிக்குள் அனுமதிக்கிறார்கள்.
அதே சமயம் தமிழக-கேரள எல்லை பகுதியான கொல்லங்கோடு அருகே உள்ள ஊரம்பு மற்றும் காக்கவிளை சோதனை சாவடி வழியாக கேரள மக்கள் எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் குமரி மாவட்டத்திற்குள் நுழைவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது. 

தீவிர கண்காணிப்பு

அதைத் தொடர்ந்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் காக்கவிளை சோதனை சாவடி மற்றும் ஊரம்பு பகுதியில் தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்து வருகிறார்கள். கொரோனா தடுப்பூசி இரண்டும் செலுத்தியவர்களை அதற்கான சான்றிதழ்களை சரிபார்த்து குமரி மாவட்டத்திற்குள் அனுமதித்தும், ஒரு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தி ஒரு சிலரை அனுமதித்தும் பல வாகனங்களை கேரளாவிற்கு திருப்பி அனுப்புகிறார்கள்.

Next Story