பூந்தமல்லியில் சாலையின் நடுவே பழுதாகி நின்ற தண்ணீர் லாரியால் போக்குவரத்து பாதிப்பு


பூந்தமல்லியில் சாலையின் நடுவே பழுதாகி நின்ற தண்ணீர் லாரியால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 5 Sept 2021 9:16 AM IST (Updated: 5 Sept 2021 9:16 AM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லியில் சாலையின் நடுவே பழுதாகி நின்ற தண்ணீர் லாரியால் போக்குவரத்து பாதிப்பு.

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க. சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த பா.ஜ.க. பிரமுகர்களின் வாகனங்களை அந்த பகுதியில் சாலையோரம் நிறுத்தி இருந்ததால் குமணன்சாவடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அப்போது அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி திடீரென சாலையின் நடுவே பழுதாகி நின்றுவிட்டது. மேற்கொண்டு லாரியை இயக்க முடியாமல் டிரைவர் பரிதவித்தார். நடுரோட்டில் லாரி பழுதாகி நின்றுவிட்டதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார், அந்த வழியாக சென்ற பொதுமக்களுடன் சேர்ந்து சாலையின் நடுவே பழுதாகி நின்ற லாரியை சிறிதுதூரம் தள்ளிச்சென்று சாலையோரம் நிறுத்தினர். அதன்பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.


Next Story