மாவட்ட செய்திகள்

பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் பிணமாக மீட்பு + "||" + Recovery of teenage corpse inside locked house

பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் பிணமாக மீட்பு

பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் பிணமாக மீட்பு
பூந்தமல்லி அருகே பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் பிணமாக மீட்கப்பட்டார்.
பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், பெரியபட்டு தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 32). இவருடைய மனைவி அமீனா (28). இருவரும் 2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

கார்த்திக், ஆந்திராவில் வேலை செய்து வருகிறார். வேலப்பன்சாவடியில் உள்ள கார் ஷோரூமில் வேலை செய்து வந்த அமீனா, 10 நாட்களுக்கு ஒருமுறை ஆந்திராவுக்கு சென்றுவிட்டு வருவது வழக்கம்.


கடந்த 2 நாட்களாக அமீனா வீட்டின் கதவு பூட்டியே கிடந்தது. அவர் ஆந்திரா சென்றிருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் கருதினர்.

பிணமாக கிடந்தார்

இதற்கிடையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பூட்டிய வீட்டுக்குள் கட்டிலில் அமீனா பிணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்தது. அவர் இறந்து 2 நாட்கள் ஆகி இருக்கலாம் என தெரிகிறது.

அமீனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது உடல் நலக்குறைவாக இறந்தாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். அமீனாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. காதலன் ஏற்காததால் அரசு ஆஸ்பத்திரியில் இளம்பெண் தற்கொலை
கணவர், 2 மகள்களை உதறிவிட்டு ராமநாதபுரம் வந்த இளம்பெண்ணை, காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், அந்த பெண் அரசு ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட விபரீத சம்பவம் நடந்துள்ளது.
2. பூட்டிய வீட்டுக்குள் மீன்வளத்துறை அதிகாரி எரிந்த நிலையில் பிணமாக மீட்பு
பூட்டிய வீட்டுக்குள், மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பொன்னேரி அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
3. காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி சொத்து மீட்பு
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ரூ.250 கோடி சொத்து மீட்கப்பட்டது. இந்த இடம் அமைந்துள்ள கட்டிடத்துக்கு அமைச்சர் சேகர்பாபு ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொண்டார்.
4. லிபிய கடலோரம் ஒதுங்கிய 2 படகுகள்; 16 உடல்கள் மீட்பு
லிபியா நாட்டின் கடற்கரையோரம் கரை ஒதுங்கிய படகுகளில் இருந்து 16 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
5. அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை 30 மணி நேரத்தில் மீட்பு
தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட குழந்தையை 30 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். உதவுவது போல நடித்து கட்டைப்பையில் வைத்து குழந்தையை எடுத்துச்சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.