கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு


கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 5 Sept 2021 5:29 PM IST (Updated: 5 Sept 2021 5:29 PM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள பார்சம்பேட்டை ஜெயமாதா நகர் அப்பாசி கவுண்டர் தெருவில் வசித்து வந்தவர் திலகவதி (வயது 62). இவரது கணவர் மாதவகுமார் ஏற்கனவே இறந்து விட்டார்.

இந்த நிலையில் திலகவதி நேற்று  இரவு கழிவறைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை, 

இன்று காலை அவரது வீட்டு பின்புறம் சென்றவர்கள் அங்குள்ள கிணற்றில் திலகவதி பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

 தகவல் அறிந்த அவர்களது குடும்பத்தினர் கிணற்றில் இருந்து திலகவதி பிணமாக மீட்டனர்.

இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் திலகவதியின் மகள் மாதவி புகார் அளித்தார். 

அதன்பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல்விசாரணை செய்து வருகிறார்.

Next Story