திண்டுக்கல்லில் கொட்டி தீர்த்த மழை


திண்டுக்கல்லில் கொட்டி தீர்த்த மழை
x
தினத்தந்தி 5 Sep 2021 2:28 PM GMT (Updated: 2021-09-05T19:58:51+05:30)

திண்டுக்கல்லில் மழை கொட்டி தீர்த்தது.

திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. இந்த நிலையில் மதியம் 2 மணி அளவில் திடீரென வானில் கருமேக கூட்டங்கள் திரண்டன. அதையடுத்து சாரல் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் அது பலத்த மழையாக மாறியது. சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதில் வாகனங்கள் தண்ணீரை கிழித்தபடி சீறிப்பாய்ந்து சென்றன. சிலர் மழையில் நனைந்தபடியே இருசக்கர வாகனங்களில் தங்களின் வீடுகளுக்கு சென்றனர். சூரியனின் வெப்பத்தை தணிக்கும் வகையில் பெய்த இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Next Story