திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் கொண்டாட்டம்


திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 5 Sept 2021 8:16 PM IST (Updated: 5 Sept 2021 8:16 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திண்டுக்கல்:
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் விழா திண்டுக்கல்-திருச்சி சாலையில் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே நடந்தது. திண்டுக்கல் வ.உ.சிதம்பரம் பிள்ளை சிலை அமைப்பு மற்றும் பராமரிப்பு அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த விழாவுக்கு அறக்கட்டளை தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் தனபாலன், பொருளாளர் பெருமாள்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அறக்கட்டளை நிர்வாகிகள் சார்பில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதையடுத்து தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். விழாவில் வேலுச்சாமி எம்.பி., வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன், ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், நகர செயலாளர் ராஜப்பா, திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. முன்னாள் துணை செயலாளர் பெ.ஜீவா, இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கோ.ரவிசங்கர், தெற்கு ஒன்றிய பொருளாளர் ஜி.கவிதாமுருகன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி நல்லமனார்கோட்டை கே.பாண்டியன், தி.மு.க. பிரமுகரும், நாகம்மாள் சமூக அறக்கட்டளை தலைவருமான பூத்தாம்பட்டி மா.அருண்பாலன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தாமரைச்செல்விமுருகன்  உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சான்றிதழ்கள்
இதேபோல் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் மருதராஜ் தலைமையில் நிர்வாகிகள் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் வ.உ.சி. பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட சிலம்பம் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வீரமார்பன், அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதிமுருகன், இளைஞரணி மாவட்ட செயலாளர் வி.டி.ராஜன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
அதையடுத்து பா.ஜ.க. மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் நிர்வாகிகள் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் செந்தில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். விழாவில் மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர். வெள்ளாளர் முன்னேற்ற சங்க கவுரவ தலைவர் ஜோதிமுருகன் தலைமையில் நிர்வாகிகள் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அதைத்தொடர்ந்து அரிசிக்கார வெள்ளாளர் சங்க தலைவர் மணிகண்டன், செயலாளர் முருகேசன், பொருளாளர் மோகன்தாஸ் மற்றும் நிர்வாகிகள் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மாவட்ட சிவாஜி தலைமை மன்றம் சார்பில் தெற்கு ரதவீதியில் வ.உ.சி. பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் காங்கிரஸ் கமிட்டியின் மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன் வ.உ.சி. உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். விழாவில் மன்றத்தின் மாவட்ட தலைவர் திருப்பதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பழனி
பழனியில் தமிழக வேளாளர் பேரவை சார்பில் வ.உ.சி. பிறந்தநாள் விழா நடந்தது. இதையடு்த்து பஸ்நிலையம் அருகே காந்திசிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட வ.உ.சி உருவப்படத்துக்கு பேரவையின் கவுரவ தலைவர் கந்தவிலாஸ் செல்வகுமார் மலர்தூவி மரியாதை செய்தார். பின்னர் அவர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அகில இந்திய வேளாளர்-வெள்ளாளர் மகாசேனை சார்பில் இளைஞரணி தலைவர் அசோக் தலைமையில் வ.உ.சி. படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. இதில் நிர்வாகி நாகுஜி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் அனைத்து பிள்ளைமார் பேரவை சார்பில் அ.கலையம்புத்தூரில் மாநில பொதுச்செயலாளர் மாணிக்கம் தலைமையில் வ.உ.சி. படத்துக்கு மரியாதை செய்யப்பட்டது.
கொடைக்கானல்
கொடைக்கானல் நகர, ஒன்றிய பிள்ளைமார் சங்கத்தின் சார்பில் மன்னவனூரில் வ.உ.சி. பிறந்தநாள் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதையடுத்து தாரை, தப்பட்டை முழங்க வ.உ.சி.யின் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்து இனிப்பு  வழங்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மன்னவனூர் பிள்ளைமார் சங்க தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கேசவன், செயலாளர் ஞானசேகரன், பொருளாளர் லோகநாதன், துணைச்செயலாளர் தில்லைநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி தலைவர் சத்யராஜ் வரவேற்றார்.
இதில் கொடைக்கானல் நகரத்தலைவர் மாரிச்சாமி, கவுரவ தலைவர்கள் கணேஷ்பிரபு, முரளிதரன், நிர்வாகிகள் சரவணன், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கொடைக்கானல் நகர, ஒன்றிய, பிள்ளைமார் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மன்னவனூர் கிளை நிர்வாகி பால்பாண்டி, தொண்டர் படையை சேர்ந்த பிரபாகரன் ஆகியோர் நன்றி கூறினார்.

Next Story