கொடைக்கானலில் கஞ்சா விற்ற 4 பேர் கைது


கொடைக்கானலில் கஞ்சா விற்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 5 Sep 2021 3:36 PM GMT (Updated: 2021-09-05T21:06:34+05:30)

கொடைக்கானலில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொடைக்கானல்:
கொடைக்கானலில் கஞ்சா விற்கபடுவதாக புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் தலைமையிலான போலீசார் நேற்று அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள ரோஸ் கார்டன் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா விற்ற கொடைக்கானல் கல்லுக்குழி பகுதியை சேர்ந்த ஜெகன் என்ற ஜெகநாதன்(வயது 42), கூக்கால் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார்(54), முருகன் (61), கதிரவன் (54) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story