முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 5 Sept 2021 9:26 PM IST (Updated: 5 Sept 2021 9:26 PM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கூடலூர்: 

முல்லைப்பெரியாறு அணை
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை. ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் நீர்ப்பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாறு, தேக்கடி ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 
இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முல்லைப்பெரியாற்றில் நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 763 கன அடியாக இருந்தது.

நீர்மட்டம் 132 அடி
இந்நிலையில் நேற்று நீர்வரத்து வினாடிக்கு 1,169 கனஅடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 132 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 
தேனி மாவட்டம் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு (மில்லிமீட்டரில்) வருமாறு:- 
முல்லைப்பெரியாறு- 6.6, தேக்கடி- 24, கூடலூர்- 20.3, சண்முகாநதி அணை- 9.8, உத்தமபாளையம்- 3.2, வீரபாண்டி-11.1, வைகை அணை-2.4, மஞ்சளாறு அணை-15, மருதாநதி அணை -8.2, சோத்துப்பாறை அணை- 3.

Next Story