திருப்பூர் மாவட்டத்தில் ஆசிரியர்கள் 11 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை கலெக்டர் வினீத் வழங்கினார்.


திருப்பூர் மாவட்டத்தில் ஆசிரியர்கள் 11 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை கலெக்டர் வினீத் வழங்கினார்.
x
தினத்தந்தி 5 Sept 2021 9:41 PM IST (Updated: 5 Sept 2021 9:41 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் ஆசிரியர்கள் 11 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை கலெக்டர் வினீத் வழங்கினார்.

திருப்பூர், செப்.6-
திருப்பூர் மாவட்டத்தில் ஆசிரியர்கள் 11 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை கலெக்டர் வினீத் வழங்கினார்.
ஆசிரியர் தினம்
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 5-ந் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியர் தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் சார்பாக டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் ஆசிரியர் தினத்தையொட்டி, சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். 2020-21-ம் ஆண்டு கல்வியாண்டில் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 11 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
11 ஆசிரியர்களுக்கு விருது
அதன்படி திருப்பூர் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சுரேஷ், தாராபுரம் செலாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தெய்வீகன், உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சின்னராசு, திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சிவராஜன், தாராபுரம் புனித அலோசியஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் பழனிச்சாமி, உடுமலை ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் கண்ணபிரான், உடுமலை பூளவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியை வசந்தி, பல்லடம் கணபதிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சுதா, திருப்பூர் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாமுண்டீஸ்வரி, தாராபுரம் கரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கல்பனா, திருப்பூர் கே.செட்டிப்பாளையம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் மணிகண்டன் ஆகியோருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது மற்றும் பாராட்டு சான்றிதழ், ரொக்கப்பரிசுத்தொகையை கலெக்டர் வழங்கினார்.
விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ், மாவட்ட கல்வி அலுவலர்கள் நாகராஜன் (பல்லடம்), மகேந்திரன் (திருப்பூர்), ராஜகோபால் (தாராபுரம்) மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story