பொதுமக்களுக்கு இலவச மூலிகை மரக்கன்றுகள்


பொதுமக்களுக்கு இலவச  மூலிகை மரக்கன்றுகள்
x
தினத்தந்தி 5 Sept 2021 9:53 PM IST (Updated: 5 Sept 2021 9:53 PM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களுக்கு இலவச மூலிகை மரக்கன்றுகள்

போடிப்பட்டி, 
இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களைத் தேடி இந்திய மருத்துவம் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக நமது பாரம்பரிய மூலிகை வகைகளைப்பாதுகாக்கும் வகையிலும், அவற்றின் பயன்பாடுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் இலவச மூலிகை மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 
அதன்படி மடத்துக்குளம் அரசு ஆஸ்பத்திரி சித்த மருத்துவப் பிரிவின் சார்பாக நேற்று 30-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நாவல், புங்கன், பாதாம், மலைவேம்பு உள்ளிட்ட மூலிகை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.மேலும் அந்த மூலிகைகளின் பலன்கள் குறித்து மக்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசு ஆஸ்பத்திரி சித்த மருத்துவர் சிவக்குமார், அரசு மருத்துவர் அனீஸ் கார்த்திக், சித்தா பிரிவு மருந்தாளுனர் பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story