போலி பீடி விற்றவர் கைது
தேனியில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி பீடி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
தேனி:
தேனி பவர்ஹவுஸ் தெருவை சேர்ந்தவர் அற்புதானந்தா (வயது 54). இவர், பிரபல பீடி நிறுவனத்தின் தேனி மாவட்ட மேலாளராக பணியாற்றி வருகிறார். தேனி சுற்றுவட்டார பகுதிகளில் அந்த நிறுவனத்தின் பெயரில் போலி பீடி விற்பனை செய்யப்படுவதாக அவருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவரும், சக ஊழியர்களும் கருவேல்நாயக்கன்பட்டி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு தென்காசி மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்த ஆதிலிங்கம் (52) என்பவர் அந்த நிறுவனத்தின் பெயரில் போலியான பீடி பாக்கெட்டுகளை அங்குள்ள ஒரு கடைக்கு விற்பனைக்காக கொண்டு வந்தார். அவரை அற்புதானந்தா மற்றும் ஊழியர்கள் பிடித்து தேனி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் 73 பாக்கெட் பிடி இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர் இந்த பிடி பாக்கெட்டுகளை தென்காசி மாவட்டம் சுரண்டையை சேர்ந்த காசிப்பாண்டியன் என்பவரிடம் இருந்து வாங்கி வந்ததாக கூறினார். இதையடுத்து ஆதிலிங்கம், காசிப்பாண்டியன் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஆதிலிங்கத்தை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story