தாராபுரம் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட சின்ன வெங்காயம் கடந்த ஒரு வார காலமாக விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தாராபுரம் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட சின்ன வெங்காயம் கடந்த ஒரு வார காலமாக விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
x
தினத்தந்தி 5 Sept 2021 10:06 PM IST (Updated: 5 Sept 2021 10:06 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட சின்ன வெங்காயம் கடந்த ஒரு வார காலமாக விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தாராபுரம், 
தாராபுரம் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட சின்ன வெங்காயம் கடந்த ஒரு வார காலமாக விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சின்னவெங்காய சாகுபடி
தாராபுரம் வட்டார பகுதியான அலங்கியம், கொங்கூர், கொளத்துப்பாளையம், கோவிந்தாபுரம், சின்னபுத்தூர் குண்டடம், செலாம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயம் விலை நிர்ணயம் இல்லாததால் விவசாயிகள் அவற்றை இருப்பு வைக்க முடிவு செய்துள்ளனர். சின்ன வெங்காயம் விலை தற்போது மார்க்கெட்டில் சரிந்துள்ளது. 
விவசாயி ஒருவர் கூறியதாவது:-
 . ஒரு ஏக்கருக்கு 2 கிலோ வெங்காயம் விதை நாற்று நட்டு 40 நாட்கள் கழித்து நடவு செய்கின்றனர். அவ்வாறு நடவு செய்யும் பயிர்கள் 100 முதல் 110 நாட்களில் வெங்காயம் அறுவடைக்கு தயாராகி விடுகிறது. 
விலை வீழ்ச்சி
அறுவடைக்கு தயாராகும் வெங்காயம் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதையில் 5 முதல் 6 டன் வெங்காயம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல வெங்காய நடவு செய்தால் ஒரு ஏக்கருக்கு 750 கிலோ வீதம் நடவு செய்யப்படுகிறது. இவையும் 60 நாட்களில் அறுவடைக்கு தயாராகி வருகிறது. அவ்வாறு தயாரான வெங்காயம் ஏக்கருக்கு சராசரியாக ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை விவசாயிகள் லாபம் ஈட்டி வந்தனர். 
இந்த ஆண்டு தமிழகத்தில் பல பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் அனைத்து பகுதிகளிலும் வெங்காயம் சாகுபடி செய்துள்ளது. அதேபோல கொரோனா கால கட்டம் என்பதால் ஏற்றுமதி இல்லாமல் போனதால் வியாபாரிகள் வாங்க முன்வருவதில்லை. இதனால் வெங்காயத்தின் விலை  கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
அரசு கொள்முதல் செய்யுமா?
 தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் அறுவடை செய்யப்பட்ட வெங்காயம் தற்போது வியாபாரிகள் வாங்க கூட ஆள் இல்லாமல் போனதால் கிலோ ஒன்று 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் தற்பொழுது ரூ.12 முதல் ரூ.15 வரை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது ஆகவே அரசு சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story