கொரோனா தடுப்பூசி முகாம்
கொரோனா தடுப்பூசி முகாம்
திருப்பூர், செப்.6-
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் கொரோனா தொற்று பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை நேற்று ஆய்வு செய்தார். அதன்படி, 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட தென்னம்பாளையம் சந்தைப்பேட்டை பகுதியில் நேற்று முதல் தொடங்கப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தார். பின்னர் 3-வது மண்டலத்துக்கு உட்பட்ட செல்லாண்டியம்மன் குடியிருப்பு, ஆத்துப்பாளையம் குடியிருப்பு, 1-வது மண்டலத்துக்கு உட்பட்ட வேலம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், மாநகராட்சி பள்ளி, 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட பூலுவப்பட்டி, 4-வது மண்டலத்தில் குப்பாண்டம்பாளையம் பகுதிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை ஆணையாளர் ஆய்வு செய்தார். செல்லாண்டியம்மன் குடியிருப்பு பகுதியில் கொரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தை ஆணையாளர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருப்பூர் மாநகராட்சியில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற இலக்கை அடையும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து கொரோனா இல்லாத மாநகராட்சியாக மாற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஆணையாளர் வேண்டுகோள் விடுத்தார்.
Related Tags :
Next Story