நகர்புற படித்த ஏழை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
நகர்புற படித்த ஏழை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி அளிப்பதற்கு தகுதி உடைய நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திறன் வளர்ப்பு பயிற்சி
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு மற்றும் பணியமர்த்தும் திட்டத்தின் கீழ் நகர்ப்புற படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்திறன் பயிற்சி, கட்டுமானம் குழாய் பொருத்துனர் மற்றும் ஆடை தயாரிப்பு தொடர்புடைய பயிற்சிகள் நடத்திட உரிய நிறுவனங்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகிறது.
10-ந் தேதிக்குள்
விண்ணப்பிக்கும் திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவனங்கள் தேசிய திறன் வளர்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அரசு மூலம் வழங்கப்படும் திறன் வளர்ப்பு பயிற்சிகள் மற்றும் ஊதியத்துடன் வேலைவாய்ப்பு பயிற்சி முடித்தமைக்கான முன் அனுபவம் குறித்த ஆதாரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பிரதமர் கவுசல் கேந்திரா பயிற்சி மையங்களை கொண்ட திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தகுதியான திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவனங்கள் தங்களது கருத்துருக்களை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட அலுவலகம், நிறைமதி ஊராட்சி மன்ற வளாகம் கள்ளக்குறிச்சி என்ற முகவரியில் வருகிற 10-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story