பட்டாசு தயாரித்தவர் கைது


பட்டாசு தயாரித்தவர் கைது
x
தினத்தந்தி 5 Sept 2021 10:27 PM IST (Updated: 5 Sept 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

பட்டாசு தயாரித்தவர் கைது செய்யப்பட்டார்.

தாயில்பட்டி, 
தாயில்பட்டி சுற்றுவட்டார பகுதியில் வீடுகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் தலைமையில் தாயில்பட்டி, கலைஞர்காலனி, எஸ்.பி.எம். தெரு உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. 
அப்போது எஸ்.பி.எம். தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது 39) வீட்டில் அனுமதியின்றி தயாரித்து வைத்திருந்த 30 கிலோ சரவெடிகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். 

Next Story