புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது


புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது
x
தினத்தந்தி 5 Sept 2021 10:42 PM IST (Updated: 5 Sept 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டையில் ரூ. 1½ லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 
புகையிலை பொருட்கள்
அருப்புக்கோட்டை நகர் பகுதியில் சட்டவிரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதனையடுத்து புகையிலை பொருட்கள் ஒழிப்பு பணியில் டவுன் போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். 
இந்தநிலையில் வெள்ளக்கோட்டை சண்முகவேலன் தெருவில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. 
பறிமுதல்
அதன்பேரில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் மூடை, மூடையாக புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர். 
இதைத் தொடர்ந்து அந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து அதனை பதுக்கி வைத்திருந்ததாக முத்துராஜ் (வயது 32) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story