நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு நாய்களை கொன்ற 2 பேர் கைது


நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு நாய்களை கொன்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 Sep 2021 5:23 PM GMT (Updated: 2021-09-05T22:53:08+05:30)

விழுப்புரத்தில் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு நாய்களை கொன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் சாலாமேடு பகுதி ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு அருகே ஒருவர், 2 நாய்களை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு கொன்று அதனை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றார். இதைபார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வி.மருதூர் கிராம நிர்வாக அலுவலர் உமாபதி விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் விழுப்புரம் சாலாமேடு, ஆற்காடு நகரை சேர்ந்த  கனகராஜ் (வயது 51) என்பவர் தனது வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்த கோழிகளை தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் கடித்துள்ளது. இதில் கோழிகள் செத்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த கனகராஜ் ஆசாகுளத்தை சேர்ந்த நரிக்குறவரான ராஜ்குமார் (35) என்பவர் மூலம்  நாட்டுத்துப்பாக்கியால் 2 தெருநாய்களை சுட்டுக் கொன்றது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ராஜ்குமாரிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. 


Next Story