எஸ்.புதூர் பகுதியில் மழை


எஸ்.புதூர் பகுதியில் மழை
x
தினத்தந்தி 5 Sept 2021 11:13 PM IST (Updated: 5 Sept 2021 11:13 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.புதூர் பகுதியில் மழை பெய்தது

எஸ்.புதூர், 
எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான புழுதிபட்டி, செட்டிகுறிச்சி, தர்மபட்டி, கே.புதுப்பட்டி, குன்னத்தூர், பிரான்பட்டி, நாகமங்கலம், கரிசல்பட்டி ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
 காலை முதலே மேக மூட்டம் காணப்பட்டு வந்த நிலையில் மதியம் திடீரென சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக விட்டு, விட்டு நல்ல மழை பெய்தது. 
ஓரிரு நாட்களுக்கு முன்பாக பெய்த மழையின் ஈரம் இருந்த நிலையில் அந்த பகுதிகளில் குளிர்ச்சி நிலவி சாலையோரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story