கொரோனா தடுப்பூசி முகாம்
கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே ஆ.தெக்கூரில் உள்ள சிங்கை சித்தர் ஐயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு கொரோனா பகுதியில தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரி தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். கல்லூரி தாளாளர் செந்தில் குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஹேமா மாலினி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் நெற்குப்பை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கணேஷ்குமார் மேற்பார்வையில் 5 செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள் கொண்ட குழுவினரால் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். முன்னதாக அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story