டீ கடைக்காரர் கொலை?
டீ கடைக்காரர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை,
தேவகோட்டை அருசூக டீ கடைக்காரர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
டீக்கடை
தேவகோட்டை அருகே உள்ளது பிரம்புவயல் கிராமம். அந்த கிராமத்தை சேர்ந்தவர் மாயழகு (வயது75). இவர் அருகே உள்ள பிடாரனேந்தல் கிராமத்தில் டீ கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவி மற்றும் 2 மகள் ஒரு மகன் உள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு கடையில் இருந்த மாயழகுவுக்கு அவரது மகள் மகாலட்சுமி சாப்பாடு கொண்டு வந்துகொடுத்துவிட்டு சென்றார். பின்னர் சாப்பிட்டுவிட்டு கடையிலேயே அவர் படுத்திருந்தார். இந்தநிலையில் தலையில் படுகாயத்துடன் மாயழகு பிணமாக கிடந்தார்.
நேற்று அதிகாலை டீக்கடைக்கு வந்தவர்கள் மாயழகு பிணமாக கிடந்தது பற்றி அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது மகள் தேவகோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார். சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர்.
விசாரணை
இதுகுறித்து தாலுகா போலீஸ் இன்ஸ் பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story