நாமக்கல்லில் பலத்த மழை சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
நாமக்கல்லில் நேற்று பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
நாமக்கல்:
பலத்த மழை
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நாமக்கல் நகரை பொறுத்த வரையில் நேற்று காலையில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. மதியத்துக்கு மேல் வானத்தில் கருமேகங்கள் திரண்டன. மாலை 4 மணி அளவில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இதனால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் குடை பிடித்து சன்றதையும், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு மெதுவாக வாகனங்களை ஓட்டி சென்றதையும் காண முடிந்தது. இந்த மழையால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது.
நாமகிரிபேட்டை
நாமகிரிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மாலை 5 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கி நின்றது.
இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story