மினி பொக்லைன் எந்திரம் பறிமுதல்
மினி பொக்லைன் எந்திரம் பறிமுதல்
கோத்தகிர
நீலகிரி மாவட்டத்தில் உரிய அனுமதி இன்றி பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தக்கூடாது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் கோத்தகிரி அருகே நெடுகுளா ஊராட்சி குன்னியட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி மினி பொக்லைன் எந்திரம் பயன்படுத்தி மண்ணை சமன்படுத்தி வருவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கிராம நிர்வாக அலுவலர் சத்யா மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று மினி பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அதன் டிரைவர் சுரேசுக்கு அபராதம் விதிக்க குன்னூர் சப்-கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story