கெட்டுப்போன 10 கிலோ மீன்கள் பறிமுதல்


கெட்டுப்போன 10 கிலோ மீன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Sep 2021 6:23 PM GMT (Updated: 2021-09-05T23:53:56+05:30)

கெட்டுப்போன 10 கிலோ மீன்கள் பறிமுதல்

ஊட்டி

ஊட்டி மெயின் பஜாரில் உள்ள ஒரு மீன் கடையில் பொதுமக்களுக்கு கெட்டுப்போன மற்றும் அழுகிய மீன்களை விற்பனை செய்து வருவதாக ஊட்டி நகராட்சி நிர்வாகத்துக்கு புகார் வந்தது. அதனை தொடர்ந்து நகராட்சி சுகாதார அலுவலர் (பொறுப்பு) ஸ்ரீதர் மற்றும் சுகாதார பணியாளர்கள் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று ஆய்வு செய்தனர். 

ஆய்வில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த மீன்கள் கெட்டுப்போய் காலாவதியாகி இருந்தது தெரியவந்தது. மேலும் மீன்களை துண்டு, துண்டாக வெட்டும் இடம் சுகாதாரமின்றி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக இருந்த 10 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனர்.

கெட்டுப்போன மீன்களை சாப்பிடுவதால் வயிறு வலி, உடல் உபாதைகள், புற்று நோய் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்த அந்த மீன் கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. இதேபோல் பிற இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story