தேன்கனிக்கோட்டையில் சூறாவளி காற்றுடன் கனமழை சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு


தேன்கனிக்கோட்டையில் சூறாவளி காற்றுடன் கனமழை சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 5 Sept 2021 11:53 PM IST (Updated: 5 Sept 2021 11:53 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டையில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாப்ரானப்பள்ளி கிராமத்திற்கு அருகே தேன்கனிக்கோட்டையில் இருந்து அய்யூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு மரம் சாய்ந்து விழுந்தது. அப்போது மரக்கிளைகள் மின்கம்பங்களின் மீது விழுந்ததால் தீப்பொறி பரவியது. இதையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலையில் மரம் விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அலுவலர்கள் விரைந்து சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

Next Story