கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை


கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 5 Sep 2021 6:24 PM GMT (Updated: 2021-09-05T23:54:37+05:30)

கிருஷ்ணகிரியில் ராணுவவீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் ராணுவவீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராணுவ வீரர்
கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 33). ராணுவ வீரர். இவர் அசாமில் பணிபுரிந்து வந்தார். அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி அவர் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்தார். இதனிடையே மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த குமார், நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
போலீசார் விசாரணை
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story