கிருஷ்ணகிரியில் இளைஞர்களுக்கான தொடர் மாரத்தான் ஓட்டம்


கிருஷ்ணகிரியில் இளைஞர்களுக்கான தொடர் மாரத்தான் ஓட்டம்
x
தினத்தந்தி 5 Sep 2021 6:24 PM GMT (Updated: 2021-09-05T23:54:38+05:30)

கிருஷ்ணகிரியில் இளைஞர்களுக்கான தொடர் மாரத்தான் ஓட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் நேரு யுவகேந்திரா, இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பாக வலிமையான இந்தியா 75-வது சுதந்திர தினத்தையொட்டி கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில், இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், வலிமையான மற்றும் ஆரோக்கியமான சுதந்திர இந்தியா என்ற உறுதிமொழியை எடுத்து கொண்டனர்.
பின்னர், அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி மாணவர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், சாரண, சாரணியர் இயக்க மாணவர்கள் என 75 பேர் கலந்து கொண்ட தொடர் மாரத்தான் தொடர் ஓட்டம் நடந்தது. இந்த ஓட்டத்தை, கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த தொடர் ஓட்டம் காந்தி சாலை, புதிய பஸ் நிலையம், ராயக்கோட்டை சாலை மேம்பாலம் வழியாக மாவட்ட விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தது.
இந்த நிகழ்ச்சியில், நேருயுவகேந்திரா இளைஞர் நலன் மாவட்ட அலுவலர் பிரேம்பரத்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர், நகராட்சி ஆணையர் முருகேசன், அறிஞர் அண்ணா கல்லூரி முதல்வர் தனபால், காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாரண, சாரணியர் திட்ட ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ், நேருயுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், தேசிய சேவை தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story