தேங்காய் பருப்பு கிலோ ரூ.105-க்கு விற்பனை
நொய்யல் பகுதியில் தேங்காய் பருப்பு கிலோ ரூ.105-க்கு விற்பனையானது.
நொய்யல்,
தென்னை விவசாயிகள்
நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், திருக்காடுதுறை, பாலத்துறை, புகளூர், புன்னம்சத்திரம், பழமாபுரம், மூலிமங்கலம், கொங்கு நகர், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், குளத்துப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தென்னை பயிரிட்டுள்ளனர்.
தேங்காய் விளைந்தவுடன் கூலி ஆட்கள் மூலம் தேங்காய்களை பறித்து மட்டைகளை அகற்றி பின்னர் தேங்காயை உடைத்து அதிலுள்ள பருப்புகளை எடுத்து வெயிலில் நன்கு உலர வைக்கின்றனர். பின்னர் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
கிலோ ரூ.105-க்கு விற்பனை
தேங்காய் பருப்புகளை வாங்குவதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து இருந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு தேங்காய் பருப்புகளை வாங்கி லாரிகள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.
கடந்த வாரத்தில் ஒரு கிலோ தேங்காய் பருப்பு 103.80-க்கு விற்பனையானது. இந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் பருப்பு 105.40-க்கு விற்பனையானது. தேங்காய் பருப்பு விலை உயர்ந்துள்ளதால் தென்னை பெயரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story