பொது வினியோக திட்டத்தில் பயன்பெற ஆலை உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம்
பொது வினியோக திட்டத்தில் பயன்பெற ஆலை உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு தனியார் அரவை ஆலைகளின் மூலமாக அரிசிகளாக மாற்றப்பட்டு பொது வினியோக திட்டத்திற்கு வழங்கப்படுகிறது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் கூடுதலாக இருப்பில் உள்ள நெல்லினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் இணையாத தனியார் புழுங்கல் அரவை ஆலைகள் மூலம் அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ”ஒரு முறை திட்டத்தின்” கீழ் வருகிற 15-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 15-ந்தேதி வரை அரவை செய்து அரிசியினை கிடங்கில் ஒப்படைப்பு செய்திட விரும்பும் தனியார் புழுங்கல் அரிசி அரவை ஆலை உரிமையாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பெரம்பலூர் மாவட்ட துணை மண்டல மேலாளர் அலுவலகத்தில் வழங்கலாம். இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் தங்கள் ஆலைகளில் நவீன அரவை கட்டமைப்புகள் மற்றும் கருவிகள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட நுகர்பொருள் வாணிபக்கழக துணை மண்டல மேலாளரை 7443139926 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story