அரியலூரில் மேலும் ஒரு பள்ளி மாணவன்-மாணவிக்கு கொரோனா
அரியலூரில் மேலும் ஒரு பள்ளி மாணவன்-மாணவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர்
தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறந்த நிலையில், அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு இன்னும் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் அந்த மாணவ-மாணவிகள் தற்போது விடுமுறையில் வீட்டில் உள்ளனர். இந்நிலையில், தேளூர் பகுதியில் நேற்று 13 வயதுடைய மாணவிக்கும், 11 வயதுடைய சிறுவனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இதேபோல் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் அலுவலக பணியாளராக பணிபுரியும் வரதராஜன்பேட்டையை சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டார். ஆனால் அவர் கடந்த 10 நாட்களாக விடுமுறையில் உள்ளதால் பள்ளிக்கு செல்லவில்லை என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். தற்போது அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளை கொரோனா தாக்கி வருவதால், பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story