இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசு
கூட்டப்புளியில் இறந்த நிலையில் கடல் பசு கரை ஒதுங்கியது.
கூடங்குளம்:
கூடங்குளம் அருகே கூட்டப்புளி மீனவ கிராமத்தில் கடற்கரையில், இறந்த நிலையில் சுமார் 500 கிலோ எடை கொண்ட கடல் பசு கரை ஒதுங்கி கிடந்தது. இதை பார்த்த கிராம மக்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு கரை ஒதுங்கிய கடல் பசுவை பார்வையிட்டனர். பின்னர் நெல்லை கோட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் அங்கு வந்து கடல் பசுவை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி தகனம் செய்வதாக கூறி எடுத்துச் சென்றனர்.
Related Tags :
Next Story