வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
சுத்தமல்லியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பேட்டை:
சுத்தமல்லி வ.உ.சி நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் மகன் நாகலிங்கம் (வயது 24). லோடு ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் செல்போனில் அதிக நேரம் பேசி வந்ததை தாய் ராஜலட்சுமி கண்டித்துள்ளாா். இதில் விரக்தி அடைந்த நாகலிங்கம் வீட்டின் உத்திரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவல் அறிந்ததும் சுத்தமல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி மாா்க்ரெட் திரேஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பாிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தாா். இச்சம்பவம் தொடா்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story