பாரதியார் நூற்றாண்டு நினைவுதின மாரத்தான் போட்டி


பாரதியார் நூற்றாண்டு நினைவுதின மாரத்தான் போட்டி
x
தினத்தந்தி 6 Sept 2021 1:42 AM IST (Updated: 6 Sept 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் பாரதியார் நூற்றாண்டு நினைவுதின மாரத்தான் போட்டி நடந்தது.

நெல்லை:
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினம் வருகிற 11-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்வாக நேற்று மாரத்தான் போட்டி நடைபெற்றது. பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரியில் இருந்து, கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு 8 கிலோமீட்டர் தூரம் ஓடி சந்திப்பில் உள்ள ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளியை வந்தடைந்தனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர் சேகர், கல்வி சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம், பள்ளிக்கூட செயலாளர் செல்லையா, ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் சண்முகம், தளவாய் திருமலைய்யப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story