வ.உ.சி. சிலைக்கு கலெக்டர் விஷ்ணு மாலை அணிவித்து மரியாதை


வ.உ.சி. சிலைக்கு கலெக்டர் விஷ்ணு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 5 Sep 2021 8:20 PM GMT (Updated: 2021-09-06T01:50:01+05:30)

நெல்லையில் வ.உ.சி. சிலைக்கு கலெக்டர் விஷ்ணு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நெல்லை:
நெல்லையில் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு கலெக்டர் விஷ்ணு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இப்போது பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கலெக்டர் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லையில் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைகளுக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை பொருட்காட்சி திடலில் வ.உ.சி. மணிமண்டபத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் விஷ்ணு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரசியல் கட்சியினர்

இதேபோல் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், த.மா.கா., ம.தி.மு.க., ச.ம.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், சைவ வேளாளர் சங்கம், வெள்ளாளர் முன்னேற்ற கழகம் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை  செய்தனர்.

Next Story