கணவர் கண் முன் விபத்தில் மனைவி பலி


கணவர் கண் முன் விபத்தில் மனைவி பலி
x

கணவர் கண் முன் விபத்தில் மனைவி பலியானார்

ஜீயபுரம்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள நச்சலூர் கீழத் தெருவை சேர்ந்தவர் சம்பத் (வயது 54). இவருடைய மனைவி சபரி (48). இவர்கள் இருவரும் நச்சலூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். முக்கொம்பு அருகே எலமனூர் என்ற இடத்தில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, திருப்பூரிலிருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் மோதியது. இந்த விபத்தில் கணவன்-மனைவி இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அவர்களில் சம்பத் காயத்துடன் உயிர் தப்பினார். சபரி, கணவன் கண் முன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சபரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் நாகப்பட்டினத்தை சேர்ந்த கருனாநிதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story