ரூ.62 லட்சம் பழைய 500, 1000 நோட்டுகளுடன் சிக்கிய 8 பேர் கும்பல்
மதுரை அருகே 62 லட்சம் ரூபாய் பழைய நோட்டுகளுடன் 8 பேர் கைது செய்யப்பட்டனர். 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாகமலைபுதுக்கோட்டை,
மதுரை அருகே 62 லட்சம் ரூபாய் பழைய நோட்டுகளுடன் 8 பேர் கைது செய்யப்பட்டனர். 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரூபாய் நோட்டுகளை மாற்ற பூஜை
மதுரை நாகமலைபுதுக்கோட்டைைய அடுத்த ஆலம்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வைத்து சிறப்பு பூஜை செய்தால் புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என்ற நம்பிக்ைகயில் ஒரு கும்பல் பூஜையில் ஈடுபட்டுள்ளதாக நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. |
இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், அருள்பாண்டியன் மற்றும் போலீசார் அந்த வீட்டிற்கு சென்றனர். அப்ேபாது அங்கு பூைஜயில் ஈடுபட்டு இருந்தவா்கள் போலீசாரை கண்டதும் நாலாபுறமும் சிதறி தப்பியோடினர். |
8 பேர் பிடிபட்டனர்
இதுகுறித்து அருகில் உள்ள ேசாதனைச்சாவடிகளுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சோதனைச்சாவடிகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்தி, சிலரை பிடித்தனர். விசாரணையில் அவர்கள், தர்மபுரியை சேர்ந்த காவேரி(வயது 31), ராசிபுரத்தை சேர்ந்த கருப்பணன் (60), கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த உதயகுமார் (48), அதே ஊரை சேர்ந்த அரவிந்தகுமார் (63), மதுரை நாகமலைபுதுக்கோட்டை சேர்ந்த சிவன் (65), விராலிமலையை சேர்ந்த முத்துமோகன் (43), மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த விஜயகுமார் (37), திருச்சி மணப்பாறையை சேர்ந்த ராஜ்குமார்(41) ஆகிய 8 பேர் என்பதும் தெரிந்தது. |
ரூ.62 லட்சம் பழைய நோட்டுகள்
அவர்களிடமிருந்து பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 1000, 500 ரூபாய் நோட்டுகளையும், 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த ரூபாய் நோட்டுகளின் பழைய மதிப்பு 62 லட்சத்து 39 ஆயிரத்து 500 என்றும், இந்த சம்பவத்தில் தலைமறைவான செந்தில் என்பவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். |
=========== |
Related Tags :
Next Story