முதியவரை தாக்கி பணம் பறித்த வாலிபர் கைது


முதியவரை தாக்கி பணம் பறித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 6 Sept 2021 2:18 AM IST (Updated: 6 Sept 2021 2:18 AM IST)
t-max-icont-min-icon

முதியவரை தாக்கி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்

திருச்சி
திருச்சி திருவானைக்காவல் மல்லிகைபுரத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 66). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் முன்பு படுத்து தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது அதிகாலை 2.30 மணி அளவில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரில் ஒருவர், மனோகரன் சட்டைப் பையில் கையை விட்டு பணத்தை திருடினார்.அப்போது திடுக்கிட்டு எழுந்த மனோகரனை அந்த நபர் தாக்கிவிட்டு தப்பி சென்றார். இதில் நிலை தடுமாறிய மனோகரன் வீட்டின் முன்பக்கத்தில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் மீது விழுந்தார். பின்னர் எழுந்து சில அடி தூரம் நடந்து சென்ற அவர் மீண்டும் சாலையில் மயங்கி விழுந்தார். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
வாலிபர் கைது
இதையடுத்து மனோகரனை அந்த பகுதியினர் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அவர், சாலையில் தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு தலையில் ரத்தம் உறைந்ததால் இறந்தது தெரிய வந்தது. இதற்கிடையே மனோகரனிடம் வழிப்பறி செய்த நபர் குறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, காந்திமார்க்கெட் தாராநல்லூரை சேர்ந்த அருண் (வயது 24) என்பவரை ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மு

Next Story