கர்நாடகத்தில் புதிதாக 1,117 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 1,117 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 6 Sept 2021 2:20 AM IST (Updated: 6 Sept 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 1,117 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 902 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 1,117 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 55 ஆயிரத்து 164 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 409 ஆக உயர்ந்துள்ளது.

  1,354 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியதை அடுத்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 228 ஆக அதிகரித்துள்ளது. 17 ஆயிரத்து 501 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பெங்களூரு நகரில் 358 பேர், தட்சிண கன்னடாவில் 183 பேர், ஹாசனில் 48 பேர், மைசூருவில் 59 பேர், குடகில் 62 பேர், உடுப்பியில் 130 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் 5 பேரும், பெலகாவி, தட்சிண கன்னடா, மைசூருவில் தலா ஒருவரும் என மொத்தம் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
  இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story