சேலம் மாவட்டத்தில் புதிதாக 58 பேருக்கு கொரோனா தொற்று
சேலம் மாவட்டத்தில் புதிதாக 58 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 59 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று புதிதாக 58 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 18 பேர் பாதிக்கப்பட்டனர். சேலம் ஒன்றிய பகுதிகளில் 29 பேர், ஆத்தூர் ஒன்றிய பகுதியில் 7 பேர், நகராட்சி பகுதியில் 4 பேர் என மாவட்டத்தில் 58 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆயிரத்து 423 ஆக அதிகரித்து உள்ளது. 94 ஆயிரத்து 152 பேர் குணம் அடைந்தனர். நேற்று 97 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றனர். 635 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,636 பேர் பலியாகி உள்ளனர்.
Related Tags :
Next Story