வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு.
சென்னை,
வடசென்னை அனல்மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது.
கடந்த 51 நாட்களுக்கு முன்பு முதல் யூனிட்டில் 2-வது அலகில் தொழில்நுட்ப பிரிவில் ஏற்பட்ட கோளாறால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் உற்பத்தி தொடங்கிய நிலையில் தொழில்நுட்ப கோளாறால் மீண்டும் அதே அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.அதேபோல் 2-வது யூனிட்டில் 2-வது அலகில் உள்ள சாம்பல் பிரிவு செல்லும் பகுதியில் ஏற்பட்ட கோளாறால் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் வல்லூர் அனல் மின் நிலையத்தில் உள்ள 3 யூனிட்டுகளில் தலா 500 மெகாவாட் வீதம் 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நேற்று திடீரென 3-வது யூனிட்டில் கொதிகலனில் ஏற்பட்ட கசிவால் 500 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

Related Tags :
Next Story