செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அமைச்சர் வழங்கினார்


செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அமைச்சர் வழங்கினார்
x
தினத்தந்தி 6 Sept 2021 11:33 AM IST (Updated: 6 Sept 2021 11:33 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஆசிரியர் தினத்தையொட்டி பள்ளி கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுகள் வழங்கும் விழா நடந்தது.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஆசிரியர் தினத்தையொட்டி பள்ளி கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் தொகுதி எம்.பி. செல்வம், செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு 10 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கி பேசினார்.

சிட்லபாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பட்டதாரி ஆசிரியர் சொக்கலிங்கம் நல்லாசிரியர் விருது மூலம் வழங்கப்பட்ட ரூ.10 ஆயிரத்தை கொரோனா நிதியாக மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்திடம் வழங்கினார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா உடன் இருந்தார்.

Next Story